#Breaking || உயிரிழந்த நடத்துனர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பணியிலிருக்கும்போது பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விழுப்புரம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் குடிபோதையில் பயணித்த அந்த பயணி தாக்கியதில், அரசு பேருந்து நடத்துனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது இந்த தகராறு ஏற்பட்டதாகவும், இதையடுத்து, நடத்துனர் அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. நடத்துனர் பெருமாள் கள்ளக்குறிச்சி சார்ந்தவர். இவர் விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

நடத்துனரை அடித்துக் கொன்றுவிட்டு பேருந்தில் இருந்து தப்பி ஓடிய குடிபோதையில் பயணித்த பயணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் தி.பெருமாள் பிள்ளையின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 lakh financial assistance to the family of the deceased conductor Chief Minister MK Stalin's announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->