சென்னை விமான நிலையம்: 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - 3 பயணிகள் கைது - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமான மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் இலங்கையிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் இருந்த ரூபாய் 49.35 லட்சம் மதிப்பிலான 919 கிராமம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், அபுதாபியில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூபாய் 42.38 லட்சம் மதிப்பிலான 792 கிராம் தங்கமும், குவைத்தில் இருந்து வந்த பெண் பயணியிடம் இருந்து ரூபாய் 43.23 லட்சம் மதிப்பிலான 805 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மூன்று பயணிகளிடம் இருந்த ரூபாய் ஒரு கோடியே 34.96 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1 crore 34 lakhs worth gold seized at Chennai airport


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->