தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.. இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வெப்பம் வருகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் கடுமையான அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

அந்த வகையில் அடுத்த 2 நாட்களுக்கு  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. அது வகையில் திருத்தணி கரூர் பரமத்தியில் 104 , பாளையங்கோட்டை திருச்சி வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

06.06.2023 100 plus paranheat in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->