உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல 7 வெற்றிகள் கட்டாயம்! நெருக்கடியில் இந்தியா!
WTC final India
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான (WTC Final) பந்தயத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வரவிருக்கும் 9 போட்டிகளில் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியாவின் தற்போதைய நிலை
இந்தத் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 4 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி, 1 டிராவுடன் முடித்துள்ளது.
தரவரிசை: இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் இந்தியா தற்போது 5-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
எதிர்காலப் போட்டிகள் மற்றும் சவால்
இந்திய அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ளன. இந்தப் போட்டிகள் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற உள்ளன.
இலங்கை vs இந்தியா - 2 ஆட்டம் (இலங்கையில் நடைபெறும்)
நியூசிலாந்து vs இந்தியா -2 {நியூசிலாந்தில் நடைபெறும்)
ஆஸ்திரேலியா vs இந்தியா - 5 {இந்தியாவில் நடைபெறும்)
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா முடிந்தவரைப் போராடி வெற்றி பெற வாய்ப்பிருந்தாலும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
சொந்த மண்ணிலேயே இந்திய அணி சமீபகாலமாகத் தடுமாறி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அது ஆச்சரியமான விஷயமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இந்தியாவின் வாய்ப்பு சவாலாக உள்ளது.