பாகிஸ்தான் பக்கமும் விராட் கோலி.. பொறி கிளப்பிய முன்னாள் வீரர் - போட்டுத்தாக்கிய இரகசியம்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 7-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றது.

இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட அணி என்றால் அது நம் இந்திய அணி தான்.

ஒரு சில அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை.

இந்நிலையில் நாளை தென்னாபிரிக்காவுடன் நடைபெறும் போட்டியில் தான் இந்திய அணி, இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியை தொடங்கியது. இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு உள்ள சௌவுதம்டவுனில் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாட உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஷ் கான் ருசிகர தகவலை பகிர்ந்துள்ளார்.

https://img.seithipunal.com/large/large_indian-team-41989.jpeg

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களி லும் அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இது குறித்து கருத்து வெளியிட்ட யூனிஷ் கான் ”பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலரும், விராட் கோலியை போல் விளையாட ஆசைப்படுகிறார்கள்.

அவருடைய உடல் மொழியைப் பின்பற்றுவதை விரும்புகின்றனர். இந்தியாவைப் போன்று பாகிஸ்தானிலும் கோலிக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup cricket virat kohli fans


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->