பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 | அசத்தலான லோகோவை வெளியிட்ட பிசிசிஐ! - Seithipunal
Seithipunal


ஆண்களுக்கான ஐபிஎல் டி20 தொடர் போன்று, பெண்களுக்கான பிரீமியர் லீக் டி20 தொடரை பிசிசிஐ அறிமுகம் செய்யசெய்துள்ளது.

அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடைபெறும் இந்த மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. 

இந்த அணிகளுக்காக விளையாடும் வீராங்கனைகள் ஏலம், மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அதிகாரப்பூர்வ லோகோவை இன்று பிசிசிஐ வெளியிடப்பட்டது. 

ஏல நிகழ்ச்சியின்போது, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் இனனிந்து மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அதிகாரப்பூர்வ லோகோவை வெளியிட்டனர். 

களிர் பிரீமியர் லீக்கின் லோகோ குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Premier League Logo WPL Auction 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->