டி20 உலக கோப்பை : கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பையில் கிறிஸ் கெய்லின் அதிக ரன்கள் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று டி20 உலகக்கோப்பையில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் (989 ரன்கள்) குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்

மகிலா  ஜெயவர்த்தனே (இலங்கை) -1016 ரன்கள்

விராட் கோலி (இந்தியா) - 989 ரன்கள் 

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) - 965 ரன்கள்

 ரோஹித் சர்மா (இந்தியா) - 904 ரன்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli moves to 2nd place in highest run scorer in T20 World Cup


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->