விராட் கோலியின் ஸ்பெஷலே இதுதான்..! வியந்து பாராட்டும் உலகின் சிறந்த வீரர்.! - Seithipunal
Seithipunal


ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரர் என ரபாடா பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

மட்டை பந்து விளையாட்டில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்க இருக்கிறது.

இந்தத் தொடரை தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ரபாடாவுக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று ரபாடா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ரபாடா கூறுகையில் ‘‘ஒயிட் பந்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதை விராட் கோலி நிரூபித்துள்ளார். அவர் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார். அவரை எதிர்த்து விளையாடுவது உங்களை ஒரு வீரராக பரிசோதித்துக் கொள்ள அருமையான வாய்ப்பு.

அவர் போராடக் கூடியவர். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கனுக்கு எதிராக பந்து வீசுவது கொஞ்சம் ஜாலி, கடின உழைப்பு, வேடிக்கை’’ என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli is the best cricketer rabada


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal