சொந்த மண்ணில் விராட் கோலி படைத்த புதிய சாதனை.!! - Seithipunal
Seithipunal


அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முன்னாள் கேப்டன் விராட் கோலி 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 5,000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தனது 149 ஆவது இன்னிங்ஸில் கோலி விளையாடினார். அதில் சொந்த மண்ணில் 96-ஆவது இன்னிங்ஸில் விளையாடினார். 

விராட் கோலி நேற்றைய போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்துதான் மூலம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தனது 121 இன்னிங்ஸ்களிலும்,  தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 130 இன்னிங்ஸிலும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 138 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எடுத்திட்டினார்.

இதுவரை 100 இன்னிங்ஸ்களுக்குள் இந்த சாதனை படைத்த ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி தான். அதே நேரத்தில் சொந்த மண்ணில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் கோலி 4-வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டியில் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 6 ஆயிரத்து 976 ரன்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 5 ஆயிரத்து 521 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க மண்ணில் ஜாக் காலிஸ் 5 ஆயிரத்து186 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மண்ணில் விராட் கோலி 5 ஆயிரத்து 2 ரன்களை எடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli fastest 5000 ran in india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->