இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடி கொடுத்த கேப்டன் விராட் கோலியின் சிறப்புகள் இவ்வளவு உள்ளதா?! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் மிக சிறந்த கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் டோனியிடம் இருந்து, டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டன் பதவியை பெற்றுக் கொண்டவர் விராட் கோலி.

இவர் தலைமையிலான இந்திய அணி இதுவரை உலக கோப்பையை வெல்லவில்லை. ஆனால், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை திறமையுடன், சிறப்பாக வழி நடத்திச் சென்றார். 

மேலும், தனது பேட்டிங் திறமையால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை சுலபமாக பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், ஐ.சி.சி. நடத்திய உலக கோப்பைத் தொடர்களில் இவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அண்மையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தது.


 
உலக கோப்பை வென்றதில்லை என்ற குறை மட்டுமே., ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த கேப்டன் விராட் கோலி தான்.

விராட் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் 95 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில்,  65 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. 27 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளது. 2 போட்டிகளில் முடிவுகள் இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது. 

கேப்டனாக விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 21 சதங்கள் விளாசியுள்ளார். இதன் சராசரி 72 ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIRAT KHOLI


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->