தட்டி தூக்கியாச்சு! வியாகாம் 18 வசமானது BCCI ஒளிபரப்பு உரிமைகள்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடைபாண்டில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 88 போட்டிகளில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார், சோனி, வியாகாம் 18 உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த ஏலத்தின் முடிவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தனது சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் 88 போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கடந்த முறை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ரூ.6,138 கோடிக்கு ஏலம் எடுத்த நிலையில் இந்த ஆண்டு ரூ.5,966.4 கோடிக்கு வியாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் ரூ. 67.7 கோடி பிசிசிஐக்கு வழங்கப்படும்.

கடந்த முறை விட தற்போது ஒப்பந்த மதிப்பு குறைந்ததற்கு காரணம் ஐசிசி தொடர்கள் எண்ணிக்கையும், ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது தான் கூறப்படுகிறது

வியாகம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ள ஒப்பந்தத்தின் படி 2023 முதல் 2028 வரை இந்திய மண்ணில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனத்தின் சேனல் மற்றும் ஜியோ சினிமா டிஜிட்டல் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பப்படும்.

அதேபோன்று 2023 முதல் 2028 வரையிலான ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்திலும், ஐசிசி 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி தொடர்களை ஜீ மற்றும் சோனி தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viacom18 acquired broadcast rights of Indian cricket team in India


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->