வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. அதிரடி மாற்றங்களுடன் களமிறங்க போகும் இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டியை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 20 ஓவர் போட்டி நாளை தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில், காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகியுள்ளதால், ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என தெரிகிறது. ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3 -2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அதிரடியாக ஆட கூடியவர்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today ind vs wi first t20 match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->