மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து வைத்த திலக் வர்மா.. வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ்  அணி இதுவரை 4 போட்டியில் விளையாடியுள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 

அதேபோல் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 4 போட்டியில் விளையாடியுள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் மும்பை அணியின் இளம் வீரரான திலக் வர்மா. மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்கால வீரராக கருதப்படுகிறார். அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த திலக் வர்மா இன்று சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் முதன் முறையாக களமிறங்க உள்ளார்.

அந்த வகையில் இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக அவரின் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு மும்பை அணி நிர்வாகம் அழைப்பை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத் வந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு சக வீரரான திலக் வர்மா சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் மும்பை அணியின் ஆலோசகர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்கள் மற்றும் நிர்வாகிகளையும் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பிரம்மாண்ட விருந்து ஒன்றை கொடுத்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெயராகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tilak Varma treat to Mumbai Indians team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->