ஒலிம்பிக் வீரருக்கு 3 ஆண்டு தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


டோமினிகா நாட்டின் ஸ்பிரிண்டரான லுகுலின் சாண்டோஸ், கடந்த 2012ஆம் ஆண்டில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 400மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். ஆனால், இவர் உண்மையான வயதை மறைத்ததற்காக அவரிடமிருந்து தடகள விளையாட்டு ஒருமைப்பாடு பிரிவு அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தடகள விளையாட்டு ஒருமைப்பாடு பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடந்த 2012ஆம் ஆண்டில் வயது குழு சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது பாஸ்போர்ட்டில் பொய்யான பிறந்த தேதியை காட்டியிருப்பதை சாண்டோஸ் ஒப்புக்கொண்டுள்ளார். 1992 இல் பிறந்த அவர், நவம்பர் 12, 1993இல் பிறந்ததாக காட்டியிருந்தார்.

 

இதன் மூலம் அவர் உலக ஜூனியர்ஸ் 2012இல் பங்கேற்க தகுதியற்றவராக இருந்துள்ளார். 2012 போட்டி விதிகளின் அடிப்படையில், போட்டி ஆண்டின் டிசம்பர் 31 அன்று ஜூனியர் விளையாட்டு வீரர்கள் 18 அல்லது 19 வயதுடையவராக இருக்க வேண்டும். 

இதனால், அவரது பதக்கம் பறிக்கப்படுவதுடன், மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது". சாண்டோஸ், இரண்டு முறை யூத் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பதுடன், கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் தொடரில் 400மீ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three years ban to olimpic player luguelin santos


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->