டி20 உலகக் கோப்பை: மரண பயத்தை காட்டிய நேபாள அணி; இறுதி ஓவரில் போராடி வென்ற இங்கிலாந்து..!
The Nepal team fought hard but lost by 4 runs against England
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இருநாடுகளும் இணைந்து நடத்துகின்றன. நேற்று கோலாகலமாக தொடங்கிய போட்டியில், மூன்று போட்டிகள் நடந்தது. இன்று நடந்த 05வது போட்டியில் நேபாளம் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய, இங்கிலாந்து அணி நேபாளம் அணியின் அபாரமான பந்து வீச்சில்தடுமாறியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலோ, ஜேக்கப் பெத்தெல் 55 ரன்களும், ஹாரி ப்ரூக் அபாரமாக ஆடி 53 ரன்களையும், வில் ஜாக்ஸ் 39 ரன்களை எடுத்தனர்.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட அணி 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. நேபாளம் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபிந்திர சிங், நந்தன் யாதவ் தலா 02 விக்கெட்டுகளையும், ஷெர் மல்லா, சந்தீப் லமிஷேன் தலா 01 விக்கெட் வீழ்த்தினர்.

அதனை அடுத்து, 185 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணிக்கு ஆசிஃப் ஷேக் (07), குஷல் 29 ரன்கள், கேப்டன் ரோகித் பௌடெல் 39 ரன்கள், தீபிந்திர சிங் 44 ரன்களை அடித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் நேபாளம் அணி தொடர்ந்து சோர்வடையாமல் போராடியது.
லோகேஷ் பாம் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பீதியை ஏற்படுத்தினார். இறுதியில், நேபாளம் அணி 06 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. கடைசி ஓவர்களில் லோகேஷ் மற்றும் கரண் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். ஆனால், கடைசி பந்தில் 06 ரன்கள் தேவை என்ற நிலையில் லேகேஷ் பாம் 01 ரன் எடுக்க நேபாளம் அணி போராடி தோல்வியை தழுவியது.
இதனால் இந்த 05-வது போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை போராடி பதிவு செய்துள்ளது.
English Summary
The Nepal team fought hard but lost by 4 runs against England