3-வது டி20: தென் ஆப்பிரிக்காவை 07 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி; தடுமாறும் கில் மற்றும் சூர்ய குமார்..!
The Indian team defeated South Africa by 7 wickets in the 3rd T20 match
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் ஆடி வருகிறது. இன்று தர்மசாலாவில் இன்று நடந்த ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது 'டி-20' போட்டியில், போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ரன்களை குவிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. இந்திய பவுலர்கள் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், ரீசா ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் ரீசா ஹென்ரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் டி காக் 01 ரன்களிலும், பிரேவிஸ் 06 ரன்களிலும் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த ஸ்டப்ஸ் 09 ரன்களிலும், டானவன் பெரேரா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் மார்க்ரம் மட்டும் அரைசதமடித்து அசத்தினார். அவரும் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 117 ரன்களில் சகல விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் , ராணா , வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். 4.1 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அபிஷேக் சர்மா 35 ரன்களில் (18 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார்.

முந்தைய போட்டிகளில் சொதப்பிய சுப்மன் கில் இந்த பொறுப்பாக ஆடினாலும் பெரிதும் சோபிக்கவில்லை. கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ், 12 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா ட்டமிழக்காமல் 25 ரன்களும், சிவம் தூபே 10 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் 15.5 ஓவர்களில் 03 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்த இந்திய அணி, 07 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
English Summary
The Indian team defeated South Africa by 7 wickets in the 3rd T20 match