டி20உலககோப்பை | இன்று இந்திய-ஆஸ்திரேலிய அணி பலப்பரீட்சை.! 4 பேர் உள்ளே., 4 பேர் வெளியே.! ரோஹித் ஷர்மா? - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 17 ஆம் தேதிமுதல் தகுதி சுற்று ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்நிலையில், இன்று இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது.

இன்று மாலை நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலபரிச்சை மேற்கொள்கிறது. 

முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்தில் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினர். அதே சமயத்தில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடவில்லை.

பந்து வீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், பும்ரா, ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அதே சமயத்தில் புவனேஷ்வர் குமார் 54 ரன்கள் வாரி வழங்க, ஆர்.அஸ்வின் நேர்த்தியாக பந்து வீசி அதிக ரன்கொடுக்கக்காமல், இங்கிலாந்து அணிக்கு சவால் விடுத்தார்.

இந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பாற்றப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதால், முதல் பயிற்சி ஆட்டத்தில் இடம்பெற்ற 4 வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். அதில் சூர்யா குமார் யாதவும், புவனேஷ் குமாரும் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

t20 world cup training match two


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->