டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை டி20 தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.

இந்த டி20 போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி குரூப்-2 ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் ஒன்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 8 அணிகளும் நேரடியாக இரண்டாவது சுற்றில் இருந்து விளையாடும். முதல் சுற்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

இந்த தகுதி சுற்று போட்டியில் இலங்கை, வங்காளதேசம் அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தகுதி சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான தொடரில் விளையாடக்கூடிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இன்று பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைகிறது. இந்த டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பின்னர் அல்லது நாளை உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

t20 world cup team india info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->