டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்.. மழையால் தடைப்பட வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இதே மைதானத்தில் இன்று மதியம் 1.30 மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

அதன்காரணமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியும் மழை காரணமாக தடைபட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்றைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் அரையிறுதிக்கு முன்னேறுவதில் பெரும் சிக்கலாக அமையும் என கூறப்படுகிறது. அதனால் இன்றைய போட்டி நடைபெறுமா நடைபெறாதா என ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup AUS vs ENG match today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->