120 பந்து, 427 ரன், ஒரே ஓவரில் 52 ரன், 64 நோ பால்! அடேய்! என்னடா இது? - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இது போன்ற ஆட்டங்களில் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை எல்லாம் எளிதாக நிகழ்த்தி வருவதும் வாடிக்கையாகிவிட்டது. அண்மையில் நேபாள் வீரர் தீபேந்திர சிங், இந்தியாவின் யுவராஜ் சிங்கின் 12 பந்து அரைசதம் சாதனையை 9 பந்துகளில் அடித்து முறியடித்தார். அவ்வாறு நிகழ்த்தப்பட்ட மற்றொரு சாதனை பற்றித்தான் நம் பார்க்க இருக்கிறோம். 

அர்ஜென்டினா மற்றும் சிலி மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 20 ஓவர் போட்டியில், 20 ஓவர் போட்டி வரலாற்றில் அதிகபட்சமான ரன்னை அடித்த அணி என்ற பெருமையை அர்ஜென்டினா பெற்றுள்ளது. அந்த அணி 20 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 427 ரன்கள் என்ற இமாலய ரன்னை அடித்துள்ளது. 

427 ரன்கள் அடித்ததில் ஒரே ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை என்பதுதான் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அர்ஜென்டினா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெய்லர் மற்றும் காலன் தலா 84 பந்துகளை சந்தித்து டைலர் 27 பவுண்டரிகளுடன் 169 ரன்களையும், காலன் 23 பவுண்டரிகளுடன் 145 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் டெய்லர் ஆட்டம் இழந்த நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய மரியா 16 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன்  40 ரன்கள் குவித்து இருக்கிறார். 

120 பந்துகளை மட்டுமே கொண்ட இருபது ஓவர் ஆட்டத்தில், 184 பந்துகள் வீசப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறதல்லவா? சிலி அணியினர் 64 பந்துகளை ஏறக்குறைய 11ஓவோர்களை நோபால்களாகவே வீசியிருக்கின்றனர். மொத்தம் 20 ஓவர் ஆட்டத்தை 31 ஓவராக மாற்றி, உதிரி வகையிலும் 73 ரன்களை வாரி வழங்கி கொடுத்திருக்கிறார்கள். 

20 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் 427 ரன்களை அர்ஜெண்டினா அணி குவிக்க, அடுத்து களமிறங்கிய சிலி அணியோ 15 ஓர்களில் 63 ரன்களுக்கு ஆட்டம் இழந்து மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. அர்ஜெண்டினா அணி 364 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மிக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் பெற்றிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 Women Cricket Argentina Chile


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->