தமிழக வீரர் நடராஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 ஒருநாள் தொடர், 3 டி20 தொடர், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட  உள்ளது. இந்திய வீரர்கள் 16 நாட்கள் கோரன்டைன் முடிவடைந்தது இதில் யாருக்கும் கொரோனா தோற்று இல்லை. 

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியோடு தொடங்கும் வேண்டும் என இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்தியா அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, தவான், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா உள்ளனர். 

அதேபோல், சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டுமென ஆஸ்திரேலியாவும் துடிப்புடன் களத்தில் இறங்குகிறது. இதனால், முதல் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் அணியில் தமிழக வீரர் டி. நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவ்தீப் சைனிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக  ஒருநாள் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

t natarajan join one day team


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal