தகர்க்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரன்! மாஸ்டர் பிளாஸ்டர் ஜெயசூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரிச்சர்ட்ஸ், சச்சினை தொடர்ந்து 'மாஸ்டர் பிளாஸ்டர்' பட்டத்தைப் பெற்ற இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யாவின் பிறந்தநாள் இன்று.

1969 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 30 ஆம் தேதி இலங்கையில் பிறந்த சனத் ஜெயசூர்யா, இலங்கை அணிக்கு மட்டுமல்லாமல், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நட்சத்திர ஆட்டக்காரராக இடம் பிடித்தவர்.

1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை அணி கைப்பற்ற முக்கிய பங்காற்றியவர் சனத் ஜெயசூர்யா. அந்த தொடரின் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்ட சனத் ஜெயசூர்யாவுக்கு, தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. 

மேலும், அந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 48 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு நாள் போட்டிகளில் 50 பந்துகளுக்கு குறைவாக சதம் விலாசிய முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும், சாதனையும் அவருக்கே உரிதானது.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல், அணிக்கு தேவைப்படும் நேரத்தில் பந்து வீசி, முக்கியமான விக்கெட்டை வீழ்த்துவதில் சனத் ஜெயசூர்யா 'கில்லி' என்று சொன்னால் மிகை ஆகாது.

2007 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2009 டி20 உலக கோப்பை இறுதி போட்டிகள் இலங்கை அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சர்வதேச டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி உள்ள சனத் ஜெயசூர்யா, 21,032 ரன்களையும், 440 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 19,298 ரன்கள் குவித்துள்ளார். இவரின் இந்த சாதனையை இதுவரை எந்த ஒரு தொடக்க ஆட்டக்காரரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்தவர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொருத்தவரை மும்பை அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்த வீரரும் ஆவார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சனத் ஜெயசூர்யா ஓய்வு பெற்றார். பின்னர் அரசியல் ரீதியாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு உள்ளார். 

சனத் ஜெயசூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka Cricketer Sanath Jayasurya birth day Special


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->