கோலி, தோனியின் செயலால் ஐபிஎல் 2020 தொடரில் வந்த அதிரடி மாற்றம்! - Seithipunal
Seithipunal


இந்த வருட ஐபிஎல் தொடரில் போட்டி நடுவர்கள் நோ-பால்களை சரியாக கவனிக்காமல் விட, அது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடரில் நோபால்கள் தவறுகள் நடக்காமல் இருக்க நோ-பால்களை மட்டுமே தனியாக கவனிக்க தனித்த டிவி நடுவர் ஒருவரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே இருக்கும் டிவி நடுவர்கள் இல்லாமல் இன்னொரு நடுவரும் இருப்பார் என ஐபிஎல் மேலும் ஒரு புதுமையை கொண்டு வர இருக்கிறது. இந்த முறை வருவதற்கு காரணமே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், இந்நாள் கேப்டன் கோலியும் தான் என கூறப்படுகிறது. 

ஏனெனில் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பெங்களூர் ஆட்டத்தில் கடைசி பந்தை மலிங்கா நோ-பாலாக வீச, அது நடுவரால் பார்க்கப்படவில்லை. கோலி இதனை “முட்டாள்தனமானது” என பரிசளிப்பு விழாவின் போது விமர்சித்தார். 

கோலி இப்படி என்றால் தோனியோ, ஆடுகளத்தின் உள்ளேயே சென்று நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்ச்சைகளை களையவே ஐபிஎல் நிர்வாகம் புதிய நடுவரை நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special umpire for no ball checking in IPL2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->