அசத்திய ஆண்டர்சன்! மீண்டும் ஏமாற்றிய கில்! கைகொடுப்பாரா ரோஹித்!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஆனது இன்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மீண்டும் ஒருமுறை முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். 

இங்கிலாந்து அணி தரப்பில் கடந்த போட்டியில் விளையாடிய ஜாப்ரா ஆர்ச்சர்,  ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பேட்ஸ்மேன்கள் லாரன்ஸ் டாம் பேஸ் ஆகிய இருவரையும் சேர்த்தார்கள். இந்திய அணி தரப்பில் சொந்த விஷயங்கள் காரணமாக விலகிய ஜஸ்பிரித் பும்ராவிற்கு  பதிலாக மொகமது சிராஜ் இணைக்கப்பட்டார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணிக்கு களமிறங்கிய சிப்லி மற்றும் சாக் க்ராவிலி மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தையே கொடுத்தனர். கடந்த இரண்டு போட்டிகளில் அசத்தியது போலவே இந்தப் போட்டியிலும் பந்து வீச வந்த அக்சர் படேல், அவருடைய முதல் ஓவரிலேயே டோமினிக் சிப்லியை 2 ரன்களில் போல்டாக ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்ததாக சாக் க்ராவிலி 9 ரன்கள் எடுத்திருந்தபோது, தூக்கி அடிக்க ஆசைப்பட்டு, மிட் ஆப் திசையில் நின்று கொண்டிருந்த முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதற்கடுத்தபடியாக களமிறங்கிய ஜோ ரூட் இந்த முறை முகமது சிராஜின்  துல்லியமான வேகப்பந்து வீச்சில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ஜானி பேர்ஸ்டோ பென் ஸ்டோக்ஸ் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்த நிலையில், 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களுடன் உணவு இடைவேளைக்கு சென்றனர். பின்னர் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தார் சிராஜ். அவருடைய பந்துவீச்சில் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 28 ரன்கள் எடுத்திருந்தார். 

பின்னர் நிதானமாக விளையாடி கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 55 ரன்களில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டிகளில் அஸ்வின் பந்துவீச்சில் திணறிய ஆலி போப் இந்த ஆட்டத்தில் சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடினார். அவர் 87 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் எடுத்து மீண்டும் ஒருமுறை அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இறுதி கட்டத்தில் டேனியல் லாரன்ஸ் போராட, அடுத்து வந்த பென்  போக்ஸ் ஒரு ரன்னிலும், டாம் பேஸ் 3 ரன்களிலும் ஜாக் லீச் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டேனியல் லாரன்ஸும் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணி தரப்பில் அக்ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2  விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார்கள்.  இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடுகிறது.

முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கில் ரன் கணக்கை தொடங்காமலே ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் மேற்கொண்டு விக்கெட் விழாமல் ரோஹித், புஜாரா ஆட்டத்தினை முடித்தனர். ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்துள்ளது. கடந்த ஆட்டங்களை போலவே இந்த ஆட்டத்திலும் ரோஹித் கைகொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shubmann gill again goes duck


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->