நான் புறப்படுகிறேன், பை பை சொல்லத் தயாரான சுப்மான் கில்! வெளியான புதிய அப்டேட்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டதால், விளையாட முடியாமல் தவித்து வருகிறார்.

சென்னையில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா லீக் போட்டியில் அவர் களமிறங்காத நிலையில், இன்று டெல்லியில் நடைபெறும் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியிலும் ஆட மாட்டார் என்பது அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது. சென்னையில் தங்கி அவர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், மருத்துவமனையில் இருந்து திரும்பி விடுதியில் தங்கியிருந்தார். 

இந்த நிலையில் இந்திய அணி இன்று டெல்லியில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது, கில் அகமதாபாத்திற்கு செல்வதற்கு தயாராகிவிட்டார் எனவும், பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஏனெனில் இந்த போட்டி தொடருக்கு முன்பாக இந்திய அணியில் சிறப்பான ஃபார்மில் இருந்தவர் சுப்மான் கில் தான். அவர் அணிக்கு திரும்பும் போது கூடுதல் பலம் கிடைத்தது போல இருக்கும். 

இந்த நிலையில் இன்று காலை வரை அவர் சென்னையில் தான் தங்கியிருந்ததாகவும், 11 மணியளவில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதனுடைய முடிவு அடிப்படையில், அவர் இன்றே அகமதாபாத் செல்வார் எனவும்,  அவருடன் இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவ குழுவினர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானுடன் டெல்லியில் விளையாடிவிட்டு அகமதாபாத் நாளை வருவதற்கு முன்பாகவே,  சுப்மான் கில் அகமதாபாத் சென்று விடுவார் என்றே தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shubman Gill wil travel to Ahmadabad before indian team from Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->