ஷுப்மன் கில் இன்று விளையாடமாட்டார்: பிசிசிஐ வெளியிட்ட அதிர்ச்சி காரணம்!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷுப்மன்கில் விளையாட மாட்டார் என பி சி சி ஐ அறிவித்துள்ளது. 

இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 396 ரன்கள், இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன்கில் சதம் அடித்த நிலையில் 255 ரன்கள் இந்தியா ஆட்டம் இழந்து இங்கிலாந்து 399 என்ற இலக்குடன் விளையாடுகிறது. 

பரபரப்பான மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்திருந்தது. இந்நிலையில் நான்காம் ஆட்டம் இன்று காலை தொடங்கியதில் ஷுப்மன்கில் -க்கு பதிலாக பீல்டிங் செய்வதற்காக சர்ஃப்ராஸ் கான் களமிறங்கியுள்ளார். 

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பி சி சி ஐ, வலது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் ஷுப்மன்கில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காயம் குணமடைவதை பொறுத்து அடுத்தவரும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்பதை விரைவில் பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shubman Gill not play today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->