திமுகவுக்கு எதிராக போர்க்கொடி: ‘புதிய வியூகம் தயாராகிறது’ - சசிகலா அதிரடி
Raising banner revolt against DMK new strategy being prepared Sasikala bold move
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பும் திருப்பமாக, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து, அதிகாரப்பூர்வமாக ராஜினாமா கடிதத்தை வழங்கிய அவர், அதனைத் தொடர்ந்து அரசியல் பயணத்தில் திடீர் திசைமாற்றம் எடுத்தார்.

மேலும், ராஜினாமா முடிந்த சில மணி நேரங்களிலேயே, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, ஆளுங்கட்சிக் கூடாரத்திற்குள் கால்பதித்தார்.
இந்த இணைவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறி, எதிர்க்கட்சிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதற்கு கடும் எதிர்வினை தெரிவித்த சசிகலா, வைத்திலிங்கத்தின் முடிவை “துரதிருஷ்டவசமானது” என கடுமையாக விமர்சித்தார்.
“தாய் கழகம் என நினைத்துக் கொண்டு, ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம். திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அதிமுகவினர் செயல்படுவது வேதனை அளிக்கிறது,” என்று அவர் சாடினார்.
மேலும், “இந்த நிலைமைகளுக்கெல்லாம் ஒரே காரணம் தான்,சிலரின் சுயநலம். கட்சி நலனைவிட தனிநலமே மேலோங்குகிறது.
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய அரசியல் வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்” எனவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.இந்த சம்பவம், தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளையும், கட்சித் தாவல்களையும் மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
English Summary
Raising banner revolt against DMK new strategy being prepared Sasikala bold move