கிரிக்கெட் திருவிழாவுக்கு அரசியல் சிக்கல்: ஐபிஎல் கால அட்டவணை தாமதமா ...?
Political trouble cricket festival Will IPL schedule delayed
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 19-வது ஐபிஎல் டி20 திருவிழா, வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இந்த கிரிக்கெட் களத்தின் கால அட்டவணை இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை.

இதற்குக் காரணம் – நாட்டின் அரசியல் கால அட்டவணை. நடப்பாண்டில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே, ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், காவல்துறை பணியமர்த்தல் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, போட்டிகளின் தேதிகள் மற்றும் மைதானங்கள் திட்டமிடப்பட உள்ளன.
அதனால், “பந்து எப்போது வீசப்படும்?” என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் என்பதே தற்போதைய நிலவரம்.
கிரிக்கெட் திருவிழாவுக்கும் அரசியல் கால அட்டவணைக்கும் இடையே நடக்கும் இந்த நேரப் போராட்டம், ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
Political trouble cricket festival Will IPL schedule delayed