ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்.. சேவாக்.! - Seithipunal
Seithipunal


ரோகித் சர்மா டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இது குறித்து சேவாக் ஒரு பேட்டியில், 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக புதிதாக ஒருவரை கொண்டுவர அணி நிர்வாகம் மனதில் நினைத்தால், 35 வயதான ரோஹித் சர்மா அந்த பதிவில் இருந்து விலக வேண்டும். 

அப்படி செய்தால் இந்த வயதில் அவர் தனது பணி சுமையையும், மனசோர்வையும் நிர்வகிக்க நன்றாக இருக்கும். அத்துடன் 20 ஓவர் போட்டிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டால், ரோகித் சர்மா நல்ல ஓய்வு எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த உதவி கரகமாக இருக்கும். 

மூன்று வடிவிலான இந்திய அணியையும் ஒருவரே வழிநடத்த வேடனும் என்ற கொள்கையை இந்திய அணி நிர்வாகம் இன்னும் விரும்பினால், அதற்கு ரோகித் சர்மாவை சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங்கில் முதல் மூன்று வரிசையில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், கே எல் ராகுல் ஆடினால் நன்றாக இருக்கும். இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சு தான் தன்னை அதிகம் கவர்ந்துள்ளது. அவரது திறமைக்கு மூன்று வடிவிலான இந்திய அணிலும் நீண்ட காலம் இடம் பெறுவார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sehwag says about rohit sharma step down as t2o captain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->