டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பட்டைய கிளப்பும்..தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்...யார் இவர்? - Seithipunal
Seithipunal


டேபிள் டென்னிஸ் என்ற விளையாட்டை தமிழகத்தில் அதிகளவு அறிமுகப்படுத்தியவர். அதிக முறை பட்டம் வென்ற சாதனைக்குரியவர்.

பிறப்பு:
 
சரத் கமல் 1982ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரின் முழு பெயர் அசந்தா சரத் கமல்.

விளையாட்டுத் துறையை பொறுத்தவரை திறமை இருந்தால் மட்டும் போதாது. அதனுடன் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயமாக வெல்லலாம் என்று அடிக்கடி கூறுவார் சரத் கமல்.

தமிழக வீரர் சரத் கமல் பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார். நுங்கம்பாக்கத்திலுள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியிலும், லயோலா கல்லூரியிலும் பயின்றவர்.

குடும்பம் : 

 இவரின் தந்தை பெயர் சீனிவாச ராவ் டேபிள் டென்னிஸ் வீரர். தாயாரின் பெயர் அன்னபூர்ணா ஆவார்.

 சரத் கமல்-ஸ்ரீ பூரணி ஆகிய இருவருக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருடைய மகள் பெயர் சுயாஷா, மகன் பெயர் தேஜஸ் ஆவார்.

சாதனைகள்:

இவருக்கு 20 வயது இருக்கும்போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் அப்போட்டியில் தோல்வியை தழுவினார். 

 அந்த தோல்வியால் துவண்டு போகாத சரத் கடினமாக பயிற்சி செய்து 2003ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக பதக்கம் வென்றார்.

சரத் கமல் தொடர்ந்து 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வாங்கினார்.

2004ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 16வது பொதுநலவாய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார்.

2006ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றார்.

அதுமட்டும் இல்லாமல் அந்த போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கம் ஜெயிக்கவும் இவர் தான் முக்கிய காரணமாக இருந்தார்.

 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளிலும், 2006ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுகளிலும் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்துள்ளார். இந்தியாவின் முதல்நிலையில் நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார்.

விருது : 

2004ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை சரத் கமல் பெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarath Kamal table tennis player history


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->