நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்கி விளாசிய சச்சின்.. தனக்கே உரிய ஸ்டைலில் பேட்டிங் செய்து அசத்தல்...! வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் இழப்பை சரி செய்ய நிதிதிரட்டுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்குபெரும் போட்டி மெல்பர்னில் இன்று நடைபெற்றது. இதில் ரிக்கி பாண்டிங் வழிநடத்திய அணியின் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் இருந்துள்ளார்.

மேலும் இந்த போட்டி நடைபெறும் மைதானத்திலேயே முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் எல்லிஸ் பெர்ரியின் கோரிக்கையை ஏற்று இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவருக்கு மட்டும் விளையாடுவதாக ஒப்புக்கொண்டார்.

Image result for sachi seithipunal

பின்னர் அங்கு சூழ்ந்திருந்த ரசிகர்களின் பலத்த கைதட்டல்களுக்கு இடையே சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் களமிறங்கினார். நீண்ட வருடங்களுக்கு சச்சின் டெண்டுல்கரை மைதான களத்தில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து கோஷங்கள் எழுப்பினர். சச்சின் டெண்டுல்கர் ஆடிய ஒரு ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகள் உடன் தீயணைப்பு வீராங்கனைகளும் பங்குபெற்றனர்.

இந்த ஓவரில் சச்சினுக்கு எல்லிஸ் பெர்ரி பந்துவீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே சச்சின் பவுண்டரி அடித்தார். தீயணைப்பு வீராங்கனையின் பில்டிங் மிஸ் ஆனதால் பந்து வேகமாக பவுண்டரி சென்றது. இதை தொடர்ந்து மேலும் 3 பந்துகளை எல்லிஸ் பெர்ரி வீசினார். அதில் சச்சின் அவருக்கே உரித்தான அவரது ஸ்டைலில் பந்துகளை விளாசி தள்ளினார்.

பின்னர் கடைசி இரண்டு பந்துகளை கரா சதர்லேண்ட் வீசினார். ஒரு ஓவர் முடிவில் சச்சின் அனைவரிடமும் கைகுலுக்கி மைதானத்தில் இருந்து விடைபெற்றார். இந்த விளையாட்டின் போது சச்சினின் தோள்பட்டை காயம் அடைந்து இருந்தது, எனவே சிறிது நாள் விளையாடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியும் இன்று பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin tendulkar 1 over video


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->