நாளை இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் போட்டி.. கேஎல் ராகுலா? சுப்மன் கில்லா? ரோகித் சர்மா அளித்த பதில்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
 
இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கேஎல் ராகுலை சேர்க்கக்கூடாது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸில் ஒரு அரை சதன் கூட அடிக்கவில்லை. அதன் காரணமாக அவரிடமிருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் சுப்மன் கில்லை களமிறக்க வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, சுபன்கில் கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடி வரும் இவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டி20 போட்டியில் சதம் என சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இவரை களம் இறக்கினால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், நாளைய அணி தேர்வு குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடினமான தருணத்தை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு அவர்களது திறமையை நிரூபிக்க கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மேலும், டாஸ் போடும்போதே அணியின் வீரர்களை கூற விரும்புகிறேன். ஏனென்றால் சில சமயம் கடைசி நேரங்களில் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma speech about 3rd Test match team against australia


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->