வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. ரோஹித், ஜடேஜா விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 14ம் தேதி சட்டகிராம் மைதானத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் காயம் காரணமாக விலகியுள்ள இந்திய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்கிறார். மேலும், அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.  அவர்களுக்குப் பதிலாக நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டையும் தேர்வுக் குழு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit, jadeja, sham ruled out test series against Bangladesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->