பெங்களூர் அணியை புரட்டியெடுத்த பஞ்சாப் கிங்ஸ்.. 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 60 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 66 ரன்களை எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் 21 ரன்களில் வெளியேறினார். பானுகா ராஜபக்சே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 

அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டன் பந்து நாலாபுறமும் பவுண்டரிக்கு விளாசி, 42 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 19 ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது. பெங்களூர் அணி சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார். வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களை வீழ்த்தினார்

இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் களம் இறங்கினர். கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 10 ரன்னிலும், பட்டிதார் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தார். பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 35 ரன்களை எடுத்தார். 

தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RCB vs PBKS Match PBKS Win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->