கங்காவில் இருந்து சந்திரமுகியாய் மாறிய விராட் கோலி! - ரவிச்சந்திரன் அஸ்வின்! 
                                    
                                    
                                   Ravichandra Ashwin said about virat kohli batting
 
                                 
                               
                                
                                      
                                            உலக கோப்பை டி20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்பரங்களில் அவுட் ஆகி வெளியேறினர். எதிர்முனையில் விராட் கோலி பொறுமையாக விளையாடி வந்தார். நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கார்த்திக் பாண்டியாவும் விராட் கோலியும் 113 ரண்களை குவித்தனர். தனது 45 வது பந்து வரை பொறுமையாக விளையாடிய விராட் கோலி பின்னர் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். விராட் கோலி 53 பந்துகளை எதிர் கொண்டு 82 ரன்களை விளாசினார். இறுதிப்பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது பாகிஸ்தான் வீரர் வீசிய பந்து ஒய்டு ஆனதால் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி பந்தம் எதிர்கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் லாங் ஆனில் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

இந்த சுவாரசியமான போட்டி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விராட் கோலியின் ஆட்டத்தை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சந்திரமுகி படத்தில் வரும் ஜோதிகாவின் மாற்றத்தை உதாரணமாகக் கொண்டு பேசியுள்ளார். விராட் கோலி ஆடிய முதல் 45 பந்துகள் வரை கங்காவாக இருந்தவர் பின்னர் சந்திரமுகியாக மாறி பாகிஸ்தான் அணியினர் பந்துகளை விலாசினார் என தெரிவித்துள்ளார். இந்த காணொளி தற்பொழுது ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Ravichandra Ashwin said about virat kohli batting