சொந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது என்பது ஒரு கனவை விடவும் மேலானது; அது உலகக் கோப்பையை விட பெரியது; ஆப்கான வீரர் ரஷித் கான் உருக்கம்..!
Rashid Khan emotionally states that international cricket being played in Afghanistan is bigger than the World Cup
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இலங்கை மற்றும் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த போட்டிக்கு தயாராகிவரும் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், கேப்டனுமான ரஷித் கான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; உண்மையை சொல்லப்போனால் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது எனக்கும், அணிக்கும், ஒவ்வொரு தனிப்பட்ட வீரருக்கும் இது உலகக் கோப்பையை விடப் பெரியது என்று கூறியுள்ளார்.
நாங்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறோம். அப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் வீரர்களை எப்படி வரவேற்கிறார்கள், அவர்கள் கிரிக்கெட்டை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை இந்த உலகமே பார்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர் தெரிவிக்கையில், சொந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது என்பது ஒரு கனவை விடவும் மேலானது. என்று ரஷித் கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலையால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இதுவரை நடைபெற்றதில்லை. அந்நாட்டு வீரர்கள் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Rashid Khan emotionally states that international cricket being played in Afghanistan is bigger than the World Cup