இந்திய அணி பயிற்சியின் போது திடீர் விசிட் அடித்தவரால், உண்டான பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட, மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரின் இறுதி மற்றும் மூன்றாவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 

இந்த போட்டிக்காக பெங்களூரு வந்த இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் திடீரென அங்கே வந்து வீரர்களை நேரில் சந்தித்து பேசினார்.

ராகுல் ட்ராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார். மைதானத்திற்கு வந்த அவர், பயிற்சி மேற்கொண்ட இந்திய அணியின் கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை, இந்திய அணியின் இரண்டு சிறந்த வீரர்கள் சந்திப்பு என பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul dravid visit Indian team training session in Bangalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->