புரோ ஹாக்கி லீக், தோல்வியை தழுவிய இந்திய அணிகள்.! - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் அணிக்கு எதிரான புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்தியாவின் மகளிர் மற்றும் ஆண்கள் அணி தோல்வியை தழுவியது.

புரோ ஹாக்கி லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன. புவனேஷ்வர் நகரில் மகளிர் ஹாக்கி அணி மற்றும் ஆடவர் ஹாக்கி அணி இரண்டாவது முறையாக ஸ்பெயின் மகளிர் மற்றும் ஆடவர் அணியை சந்தித்தன. முதலில் மகளிர் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 3-4 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்பெயின் மகளிர் அணியிடம் தோல்வியை தழுவியது. 

இதே போல் ஆடவர் பிரிவில் 3-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் அணி மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாடியது. 

ஸ்பெயின் அணி சார்பில் பாவ் சுனில் 14 மற்றும் 24 வது நிமிடத்திலும், ஜோன் டர்ரஸ் 14 வது நிமிடத்திலும், பெப் சுனில் 54 வது நிமிடத்திலும், கேப்டன் மார்க் 59 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இந்தியா சார்பில் அபிஷேக் 6-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரித் சிங் 27-வது நிமிடத்திலும், அறிமுக வீரர் சுக்ஜீத் சிங் 51 நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இந்தியா வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஜெர்மனியை சந்திக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro Hockey League India lost against Spain


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->