2வது நாளில் தடுமாறும் ஆஸ்திரேலியா.. அடுத்தடுத்து 4 விக்கெட்..!! மீண்டெழுந்த இந்திய அணி..!! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். வேகப்பந்து வீச்சுக்கு மைதானம் சாதகமாக இருக்கும் என்பதால் முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் என 4 வேகப்பந்து வீச்சாளர்களும், சூழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா உடன் இந்திய அணி களம் இறங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற டேவிட் வார்னர் 43 ரன்களும், மார்னஸ் லபுஸ்சேன் 26 ரன்களும் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலியா அணி 24.1 ஓவரில் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் விளையாடத் தொடங்கினர். ஹெட் பந்துகளுக்கு இணையாக ரன்களை சேர்த்ததால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 106 பந்துகளில் ஹெட் சதம் அடிக்க முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 323 ரன்களுக்கு 3 விக்கெடுகளை மட்டுமே இழந்திருந்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபுல் லெங்க்த் பந்துகளை வீசி ஸ்விங் செய்ய முயற்சித்தும் பந்து எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை.

இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாளில் பந்துகள் ஸ்விங் ஆகாததால் இரண்டாம் நாள் ஆட்ட தொடக்கத்தில் இருந்தே ஷாட் பாலாக வீசி டிராவிஸ் ஹெட்க்கு நெருக்கடி கொடுத்தனர். அதுவரை நன்றாக விளையாடிய ஹெட் தடுமாறத் தொடங்கினார். ஆஸ்திரேலியா அணி 361 ரன்கள் எடுத்த போது டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேமெரூன் கிரீனை வெறும் 6 ரன்னில் முகமது ஷமி விக்கெட் எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் எதிர் முனையில் நிலைத்து நின்ற ஸ்டீவ் ஸ்மித்தை 121 ரன்னில் ஷர்துல் தாக்கூர் போல்ட் ஆக்கினார். 

இவரை தொடர்ந்து களமிறங்கிய மிச்சல் ஸ்டாக் பொறுமையுடன் ஆடிக் கொண்டிருந்த பொழுது ஆஸ்திரேலியா அணி 400 ரன் கடந்த நிலையில் சப்ஸ்டியூட் பில்டிங் செய்து கொண்டிருந்த அக்சர் பட்டேல் மிச்சல் ஸ்டாக்கை ரன் அவுட் ஆக இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் பொழுது ஆஸ்திரேலியா அணி  422 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மிங்ஸ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் பொறுமையுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் அதிரடியான பந்துவீச்சு 2வது நாளின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

On WTC second day play Australian team lost wickets and stumbled


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->