உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக.! சாதனை புரிந்தது நியூஸ்லாந்து அணி.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணி தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

இந்த வருடத்தில் நியூசிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதில் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற போது, ஆஸ்திரேலியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் தசம புள்ளி அளவிலேயே இடைவெளி இருந்தது.

இந்த நிலையில், நேற்று மெல்போர்ன் பாக்சிங் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவிடம் மண்ணை கவ்வியது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்காரணமாக, நியூசிலாந்து அணி 117 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 

நியூசிலாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக  முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new zealand test team new record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->