நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனின் வரலாறு சாதனை !! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 39வது போட்டி நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் டி20 உலகக் கோப்பையில் ஆரோ வரலாற்று படைத்தார்.

ஒரு போட்டியில் நான்கு மெய்டன் ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பையில் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும், சர்வதேச டி20 போட்டியில் இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டியில் நான்கு மெய்டன் ஓவர்கள் வீசினார். பெர்குசன் 4 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. மேலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 உலகக் கோப்பையில் உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

 டி20போட்டியில் தற்போது நடந்த நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான குரூப் ஸ்டேஜ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா பப்புவா நியூ கினியா 19.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கை ஓங்கியிருந்தது செலுத்தினர். 

லோக்கி பெர்குசன் நான்கு ஓவர்கள் வீசினார், நான்கும் மெய்டன் ஓவர்கள் மற்றும் மூன்று விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மறுபுறம், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new Zealand player ferguson created world history


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->