லார்ட்ஸ் டெஸ்ட் : முன்னிலை பெற்ற நியூசிலாந்து! சொந்த மண்ணில் சோடை போன இங்கிலாந்து!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்களை குவித்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுக வீரராக களமிறங்கிய டெவோன் கன்வாய் இறுதி விக்கெட்டாக 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ் 132 ரன்களை அடித்து இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணியானது 103 ரன்கள் முன்னிலை பெற்று 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. முன்னதாக மூன்றாவது ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்ட நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இன்னிங்க்ஸ் தற்போதுதான் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand got lead against England in lords test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->