உலகக் கோப்பை களத்தில் புதிய ரூல்: சேப்பாக்கத்தில் விசில் எடுத்துச் செல்ல No Entry ..!- தமிழக கிரிக்கெட் வாரியம் விளக்கம் - Seithipunal
Seithipunal


2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் களேபரம் இந்தியா–இலங்கை இணைந்து நடத்தும் மேடையில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த உலகத் தொடரின் 4-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.

போட்டியின் சூடான தருணங்களை விட ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்ட விஷயம் மைதான நுழைவு கட்டுப்பாடுகள்தான்.

ஏற்கனவே மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை “விசில்” கூட கொண்டு செல்ல முடியாது என்ற அறிவிப்பு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வழக்கமாக சேப்பாக்கத்தை முழங்கவைக்கும் விசில் சத்தம் இல்லாமல் மைதானம் சற்றே அமைதியாக இருந்தது.இதுகுறித்து எழுந்த சர்ச்சைக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) விளக்கம் அளித்தது.

“விசிலுக்கு தடை விதித்ததில் பிசிசிஐ, ஐசிசி அல்லது எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. போலீசாரின் பாதுகாப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த தகவல் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், சேப்பாக்கம் போட்டியை விட ‘விசில் தடை’ தான் ரசிகர்களிடையே முக்கிய பேச்சு பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New rule at World Cup venue No entry whistles at Chepauk Tamil Nadu Cricket Association clarifies


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->