ஒலிம்பிக் சாம்பியன், அடுத்தமுறை பதக்கத்தின் நிறம் மாறும் - நம் தேசம் போற்றும் வீரன் நீரஜ் சோப்ரா உணர்ச்சிமிகு பேட்டி.! - Seithipunal
Seithipunal



2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எரிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். 

இந்நிலையில், நாட்டிற்காக பதக்கம் வெல்ல முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று, தங்கமகன் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், "ஒலிம்பிக் சாம்பியனாக இருப்பதால், உலக தடகள போட்டியில் அழுத்தமாக உணரவில்லை. அடுத்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்ற முயல்வேன்" என்று உலக தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேட்டி அளித்துள்ளார்.

முன்னதாக, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neeraj chopra press meet 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->