6 ஜோடி ஷூ 66 கோடியா? யார் இந்த மைக்கேல் ஜோர்டன்! - Seithipunal
Seithipunal


என்னதான் உலகின் பிரபல விளையாட்டு கால்பந்தாக இருந்தாலும் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டு என்றல் அது "பாஸ்கெட் பால்" (basketball) தான்.

அதற்க்கு முக்கிய காரணம் அவ்விளையாட்டில் புகழ் பெற்ற அமெரிக்க சாதனையாளர் மைக்கேல் ஜோர்டானையே சேரும்.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் 80, 90களிலும் பாஸ்கெட் பால் விளையாட்டு பிரபலம் அடைய மைக்கேல் ஜோர்டன் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து சங்கம் (National Basketball Association) என்பிஏ ஃபைனல்ஸ் (NBA Finals) தொடரில் 6 முறை "சிகாகோ புல்ஸ்" அணிக்காக சாம்பியன்ஷிப் வென்று அசைக்க முடியாத சாதனையை படைத்தவர் ஜோர்டன்.

ஒலிம்பிக் பந்தயங்களிலும் 2 முறை  தங்க பதக்கம் வென்றுள்ளார் ஜோர்டன். இவருக்கென உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம்.

1984 தொடங்கிய இவரின் அதகள ஆட்டம் 2003 -ல் முடிவுக்கு வந்தது. தற்போது 60 வயது ஆகும் ஜோர்டன் பயன்படுத்திய பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விடுவது வழக்கம்.

குறிப்பாக மைக்கேல் ஜோர்டன் அணிந்திருந்த ஜெர்ஸி 2022ல் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போனது.

இந்நிலையில், ஜோர்டன் பயன்படுத்திய "ஸ்னீக்கர்ஸ்" வகை காலணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன. பிரபல சோத்பி'ஸ் (Sotheby's) ஏல நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், அவரின் 6 ஜோடி காலணிகளும், இந்திய ரூபாய் மதிப்பில் 66 கோடிக்கு ஏலம் போனது.

1991, 92, 93, 96, 97 மற்றும் 98 நடந்த என்பிஏ ஃபைனஸ்சில் சாம்பியன்ஷிப் வென்ற போது ஜோர்டன் அணிந்த காலணிகள், பருமனான கேன்வாஸ் துணியால் தயாரிக்கப்பட்டு ரப்பரில் செய்யப்பட்ட ஸோல்கள் அமைந்திருக்கும்.

இந்த காலணிகளை ஏலத்தில் வாங்கியவரின் விவரங்களை ஏல நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NBA Michael Jordan 6 pair of sneakers Sothebys auction house 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->