சென்னை மக்கள் என்னை எப்போதோ தத்தெடுத்துவிட்டனர - தல தோனி.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனமான எம்.எஸ் தோனி, தோனி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அதன்படி, இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை தமிழில் எல்ஜிஎம் (Life Get Married) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியும் பங்கேற்றனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ் தோனி என்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சென்னையில் தான் விளையாடினேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிக ரன்கள் பதிவு செய்யப்பட்டதும் சென்னையில் தான். இப்போது எனது முதல் படத்தயாரிப்பு தமிழ் மொழியில் தான் அமைந்துள்ளது. சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் இங்கு நீண்ட நாட்களுக்கு முன்பே தத்தெடுக்கப்பட்டு விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS Dhoni speech in LGM movie Audio launch


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->