பயிற்சியை முடித்த தோனி!! அடுத்தகட்ட திட்டம் என்ன? - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது, இதையடுத்து தோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டுருந்தன. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனியின் யின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதனிடையே, தோனி, இந்திய துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய கிரிக்கெட் விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தோனி கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ  லெப்டினன்ட் கர்னலாக இருந்து வரும் மகேந்திரசிங் தோனி கடந்த மாதம் 31 ஆம் தேதி காஷ்மீர் சென்றார். இந்திய ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணிகளில் அவர் ஈடுபட்டார்.

இந்நிலையில், காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு சென்ற தோனி தனது ராணுவ பயிற்சியை முடித்தார். காஷ்மீரின் உரி, அனந்தநாக் பகுதிகளுக்கும் சென்றும் பணிகளை ஆற்றி அவர், இன்று தலைநகர் டெல்லி திரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்தனர். தோனியின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ms dhoni completed army training


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->