கடைசி நேரத்தில் எங்களின் முடிவை மாற்றியது ராகுல் தான்! கேப்டன் கோலியின் வெளிப்படையான பேச்சு!  - Seithipunal
Seithipunal


வெலிங்டனில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டி மீண்டும் சமனில் முடிய, சூப்பர் ஓவருக்கு சென்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

159/3 என்று வலுவாக இருந்த நியூஸிலாந்து அணி ஷர்துல் தாக்கூர் கடைசி ஓவரில், சொதப்பி 6 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழக்க ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவர் சென்றது, அதில் நியூஸிலாந்து 13 ரன்கள் எடுக்க, இந்திய அணி 16 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது.

இந்த நிலையில் சூப்பர் ஓவரில் ரெகுலர் ஆட்டத்தில் களமிறங்கிய சாம்சன், ராகுல்தான் இறங்குவதாக இருந்ததை, கடைசி நேரத்தில் ராகுல்தான்  எங்களின் முடிவை மாற்றினார் என்றும், கோலி தான் இறங்க வேண்டும் என்று ராகுல் கூறியதாகவும் ஆட்டம் முடித்ததும் கோலியே தெரிவித்தார்.

ஆட்டம் முடிந்த பிறகு கோலி கூறியதாவது, கடந்த இரண்டு ‘டை’ ஆட்டங்களிலிருந்து புதிதான ஒன்றைக் கற்றுக் கொண்டுள்ளேன். எதிரணியினர் நன்றாக ஆடும்போது பொறுமை காத்து கடைசியில் மீண்டெழலாம் என்பதை கற்றுக் கொண்டுள்ளேன். இது போன்ற விறுவிறுப்பான ஆட்டங்களை ஆடுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பாக சூப்பர் ஓவரில் ஆடியதில்லை, ஆனால் இப்போது தொடர்ச்சியாக 2 சூப்பர் ஓவரில் வென்றுள்ளோம். இது அணியின் ஒட்டுமொத்த திறமையை வெளிப்படுத்துகிறது.

சூப்பர் ஓவரில் சாம்சனையும் ராகுலையும்தான் அனுப்புவதாக இருந்தோம், ஆனால் ராகுல் என்னிடம் நான் (கோலி) இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என் அனுபவமும், நான் ஆடும் விதமும் உதவும் என்றார், அதன்பிறகே நானும் ராகுலும் களம் இறங்கினோம், ராகுலின் முதல் 2 ஷாட் ஆட்டத்தின் முக்கியமாக அமைந்தது, சஞ்சு ஒரு அச்சமற்ற வீரர் என்பதால் தான் அவரை களமிறக்கினோம் எனவும், சைனி மீண்டும் வேகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படிப்பட்ட வெற்றிகள் அணிக்கு பெருமையளிக்கின்றன என கோலி  கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lokesh rahul change the team plan


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal