INDvsWI : டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விலகல்.. மாற்று வீரர்கள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து கே.எல் ராகுல், அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கே எல் ராகுல் மற்றும் அக்‌ஷர்  பட்டேலுக்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

டி20 தொடருக்கான இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஸ்னோய், சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல், ருத்துராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kl rahul and axar petel injured rules out of west indies t20i series


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->