இன்று சென்னை அணியை எதிர்கொள்ள உள்ள கொல்கத்தா அணியின் உத்தேச பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசனின் முதல் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது. இந்த சீசனில் 10 அணிகள் இடம் பெற்று உள்ளது. அதிக தடவை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இதுவரை 25 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் 17 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் களமிறங்க உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தேச பட்டியலைப் பார்ப்போம். அதன்படி தொடக்க வீரர்களாக வெங்கடேச ஐயர் மற்றும் ரகானே ஆகியோர் இறங்குவார்கள். மூன்று மற்றும் நான்காவது வரிசையில் நிதிஷ் ராணாவும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இறங்குவார்கள். ஐந்தாவது வரிசையில் சாம் பில்லிங்ஸ், 6 மற்றும் 7வது வரிசையில் ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் ஆகியோர் இறங்குவார்கள். பந்துவீச்சாளர்கள் வரிசையில் சாமிகா கருணரத்னே, ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

கொல்கத்தா அணியின் உத்தேச பட்டியல் : வெங்கடேச ஐயர், ரகானே, நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், சாமிகா கருணரத்னே, ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KKR Probable Playing XI


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->